திருச்சி காஜாமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி!
திருச்சி காஜாமலை பகுதியில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு..
திட்டங்களால் நாள்தோறும் சாதனை படைத்து "இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும்" நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை. இன்று தொடங்கி வைப்பதில் பெருமை அடைவதாக கூறினார்.,
சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், வாடி வாசலில் சீறிப்பாய்ந்த காளைகளையும் - காளையர்களையும் உற்சாகப்படுத்தி இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார்.
மேலும் இந்த போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்த கழகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, காளைகளுக்கும் - மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் அவ்வப்போது உறுதி செய்யுமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் இ.ஆ.ப., திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி இ.கா.ப., திருச்சி மாநகராட்சி ஆணையர் எல்.மதுபாலன் இ.ஆ,ப., ஆகியோர் உடனிருந்தனர்.
-திருச்சி பிரசன்னா