இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101) காலமானார்.
மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றும் மக்களின் பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரனின் செம்மார்ந்த செவ்வணக்கம்.