வருவாய் கிராம ஊழியர்கள் சாலை மறியலில் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் 45 வருவாய் கிராம ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டியும், சிறப்பு முறை கால முறை ஊதியத்தில் இருந்து நீக்க வேண்டி கோரிக்கை முன்வைத்து ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . பின்னர் காவல் துறையினரால் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.