திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு !
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இன்று காலை 1௦.௦௦ மணி அளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து 141- திருச்சிராப்பள்ளி(கிழக்கு) சட்டமன்றத் தொகுதி வார்டுகுழு அலுவலகம் -2ல் காலை 11-௦௦ மணி அளவில் கிழக்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் திருமதி. ஜெயந்தி அவர்கள் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, அரசு அதிகாரிகள் பலரும் இங்கு உடனிருந்தனர், .இந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
-திருச்சி பிரசன்னா