logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூரில் ஐம்பெரும் விழா...

22/02/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பன்னாட்டு அல்லையன்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 2025- 2026 ஐம்பெரும் விழாவானது அல்லையன்ஸ் சங்கங்களின் முதல் துணை ஆளுநர் Dr.M.முருகன் தலைமையில்,அலையன்ஸ் இரண்டாம் துணை ஆளுநர் P.இளையராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஐம்பெரும் விழாவின் முக்கியமான சாராம்சம். *அலையன்ஸ் மாவட்டம் முதல் துணை ஆளுநர் மற்றும் இரண்டாம் துணை ஆளுநர் அதிகாரப்பூர்வ அலுவலர் முறை வருகை தினம், *மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற சான்றோர்களுக்கு பாராட்டு, *சேவை சான்றோர்களுக்கு விருது வழங்கி பாராட்டுதல்,
*அலையன்ஸ் குடும்ப செல்வன் குழந்தைகளுக்கு விருது வழங்கி பாராட்டுதல்,
*உலக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம் பிப்ரவரி 27 இல் கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழாவானது நடைபெற்றது.
இவ்விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவராகிய பசுமை நாயகன்,குமாந்தாபுரம் அல்லை டாக்டர். வி. அர்ச்சுனனின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சேவையை பாராட்டி கடையநல்லூர் அக்ஷயா அலையன்ஸ் சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடையமும் வழங்கப்பட்டது.

0
0 views

Comment