logo

தென்காசி ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப் பள்ளி முப்பெரும் விழாவில் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பு...

20/02/2026 நேற்றைய தினம் தென்காசியில் வீட்டு வசதி வாரியம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திரிகூட ராஜா துவக்கப்பள்ளியின் முப்பெரும் விழாவில், பள்ளியின் செயலாளரும் ,தமிழ் இயக்கத்தின் மாவட்ட செயலாளருமான இலக்கியத் தென்றல் Dr.R.S.K.துரை தலைமையில் தமிழ் இயக்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்த நிகழ்ச்சியில் தமிழ் இயக்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மு சிதம்பரபாரதி, பா.சிங்கராயன்,S.P.முரளி ராஜா, ஜான் தாமஸ் , தமிழ் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இலஞ்சி பா. செல்வ ராமன், தமிழ் இயக்கத்தின் மதிப்புறு தலைவர் இளங்குமரன்,பள்ளியின் கல்வி குழு தலைவர் D.டெய்சி துரை,மாவட்ட தமிழ் இயக்கத்தின் பொருளாளர் நல்லூர் நாயகன் கே.எஸ். கணேசன் ,தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஒய். பாலகிருஷ்ணன், தென்காசி மதுரம் ஹோட்டல் மணிகண்டன் ,உலகத் தமிழ் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தமிழ்வாணன், முனைவர் ஜி. விஸ்வநாதன்,மாவட்ட தமிழ் இயக்கத்தின் மதிப்புறு தலைவர் எண். எம். பெருமாள்,திருக்குறள் மன்றத்தின் செயலர் தமிழ்ச்செல்வி, சாரதா டிரஸ்ட் நிர்வாகி பி .சாந்தி, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் எஸ்.சந்திர நாராயணன் மற்றும் மாணவச் செல்வங்கள், ஆசிரியர்கள் பள்ளியின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.



இந்த விழாவில் கருத்துக் கலைஞர் பொருநை மதியழகனின் தாமிரபரணி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை பூ. சாந்தி நன்றி கூறினார்.

3
949 views