logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 21/02/2026.

21/2/2026 (மாசி9) சனிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ அடுத்த 2 மாதத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

🗞️ சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் இன்று நடைபெறுகிறது நாம் தமிழர் கட்சியின் மாநாடு

🗞️ மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு

🗞️ பாமகவுக்கு நானே தலைவர்,மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் எனக்கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

🗞️ கன்னியாகுமரி,நெல்லை,தூத்துக்குடி,தென்காசி மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

🗞️ சென்னை எழும்பூரில் சீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவையில் பெரும் குளறுபடி

🗞️ சபரிமலை கோயில் தங்க திருட்டு வழக்கில் உலோகவியல் பரிசோதனை அறிக்கையை மார்ச் மாதத்திற்குள் சமர்ப்பிக்கும்படி கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு

🗞️ ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையின் போது வழங்கப்படும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளில் 42% அதிகமானவை தவறாக பயன்படுத்துவதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது

🗞️ இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு டிரம்ப் விதித்த பரஸ்பர வரி ரத்து-அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி

🗞️ நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி - கமல் இணையும் படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

🗞️ டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று தொடங்குகிறது சூப்பர் 8 சுற்று: இன்று நியூசிலாந்து-பாகிஸ்தான் மோதல்

2
1300 views