கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்”.. இபிஎஸ் வாக்குறுதி
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்தவகையில், நேற்று (பிப்.15) ஈரோட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘நடைபாதைக் கடை வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக, ‘ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள், மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்வு’ உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.