logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 16/02/2026.

16/2/2026 (மாசி 4) திங்கட்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ தமிழகம் முழுவதும் சிவாயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்:இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு,பக்தர்கள் இறை வழிபாடு

🗞️ 40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

🗞️ மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதி திராவிடர் நல நிதி பயன்படுத்தப்படவில்லை என அரசு விளக்கம்

🗞️ அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட முடியுமா முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி சவால்

🗞️ தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

🗞️ தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்

🗞️ அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம், இந்திய விவசாயிகளுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்ததாக ராகுல் விமர்சனம்

🗞️ டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

🗞️ பிரதமர் மோடியின் நேர்காணல் திட்டமிடப்பட்ட விளம்பர நடவடிக்கை என காங்கிரஸ் குற்றச்சாட்டு

🗞️ டி20 உலகக் கோப்பையில் அதிரடியாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்த இந்திய அணி

0
0 views