சமூக தாகம் இன்றைய செய்திகள் 14/02/2026.
14/2/2026 (மாசி 2) சனிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ பெண்களின் வங்கிக் கணக்குகளில் அதிகாலையில் வரவு வைக்கப்பட்ட ரூ.5,000. 3 மாத மகளிர் உரிமைத் தொகையுடன், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 வழங்கல்
🗞️ காரைக்காலில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கலந்து கொள்ள உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
🗞️ அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்துவிட்டதாக சேலம் கூட்டத்தில் விஜய் பேச்சு
🗞️ டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் சஸ்பெண்ட்:தமிழக அரசு அதிரடி
🗞️ திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி தரப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் என விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
🗞️ கடனாக வாங்கும் நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வெற்று கவர்ச்சி திட்டங்களில் வீணாக்குகிறது திமுக அரசு- சீமான்
🗞️ உலகக் கோப்பை டி20 தொடர் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே