ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தென்காசியில் மறியல் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம்...
12/02/2026 இன்றைய தினம் தென்காசி மாவட்டம்,தபால் நிலையம் முன்பு LPF,AITUC,INTUC,UTUC,MLF ஆகிய தொழிலாளர்கள் சங்கங்கள் சேர்ந்து. இன்றைய தினம் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ,மாவட்டத் தலைவர் மகேந்திரா தலைமையில், செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், மாவட்ட குழு உறுப்பினர் அருண் ஆகியோர் முன்னிலையில் ,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிடக் கோரியும்,தொழிலாளர் நலச் சட்டங்களை 29 ஐ 4 சட்ட தொகுப்பாக மாற்றி தொழிலார் உரிமையை பறிக்கின்ற ஒன்றிய மோடி அரசை கண்டித்து வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.என்றும் மக்கள் நல பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.