ஆர்.எம்.கே பாடசாலையில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ராமர் பட்டாபிஷேக நாடகம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் நடைபெற்ற 12வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவிற்கு ஆர்.எம்.கே கல்வி குழும தலைவரும்
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார்,
இந்த விழாவிற்கு ஆர்.எம்.கே கல்வி குழும துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் எலமஞ்சி பிரதீப், ஆர்.எம்.கே கல்வி குழும ஆலோசகர்கள் வி.மனோகரன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தா.பிச்சாண்டி, எம்.எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் மண்டல இயக்குனர் ஜி.சுகுணா சிங் ஐபிஎஸ், தனலட்சுமி சுகுணசிங் பங்கேற்று ஆண்டு விழா, விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் பேசிய ஆர்.எம்.கே கல்வி குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், கல்வியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களையும், விளையாட்டில் சிறப்பிடம் பெறும் மாணவர்களையும், ஆர்.எம்.கே கல்வி குழுமம் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது கல்வி, விளையாட்டு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் மண்டல இயக்குனர் ஜி.சுகுணா சிங் ஐபிஎஸ் பேசும் போது, மாணவர்கள் அவர்களது பள்ளி கல்வி காலத்திலேயே அவர்களது எதிர்கால இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும், பல்வேறு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றவர், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துவது மாணவர்கள் உடலையும், மனதையும் பேணிகாத்து, அவர்களது கவனம் தேவையற்ற
செயல்களில் கவனம் செல்வதை தடுப்பதோடு, மத்திய மாநில உயர் பதவிகளை விளையாட்டுகளில் சிறப்பிடம் பெற்றவர்களும் எளிதில் பெற முடியும் என்றார்.
பின்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் 200 மாணவர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக நாடகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நாடகம் காண்போரை பரவசப்படுத்தியது. இதனை தொடர்ந்து பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் கேடயம், சான்றிதழ் ஊக்கப்பரிசனை
சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் மண்டல இயக்குனர் ஜி.சுகுணா சிங் ஐபிஎஸ் வழங்கினார்.
இந்த ஆண்டுவிழா விளையாட்டு விழாவில் ஆர்.எம்.கே கல்வி குழும இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, ஆர்.எம்.கே கல்வி குழும துணை தலைவர் டாக்டர் துர்கா தேவி பிரதீப், பள்ளி முதல்வர் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் பள்ளி மாணவர் தலைவர்
பி.எஸ்.தமிழினியன் நன்றி கூறினார்.