உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!
வாரத்தின் மூன்றாவது வணிக நாளான இன்று (பிப். 11) இந்திய பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது.
சென்செக்ஸ் 62 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகிலும் வணிகம் தொடங்கியது.
எய்ச்சர், பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் வணிகத்தைத் தொடங்கின. எனினும் சில நிமிடங்களில் சென்செக்ஸ், நிஃப்டி சரியத் தொடங்கின.