logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 11/02/2026.

11/2/2026 (தை 28) புதன்கிழமை
*இன்றைய முக்கியச் செய்திகள்!*

🗞️ சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்-முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

🗞️ விரைவில் சட்ட பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் அண்ணாமலை, மாநில நிர்வாகிகள் கடும் மோதல்

🗞️ 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

🗞️ சென்னையை அடுத்த திருவிடந்தையில் இன்று 1.50 லட்சம் பேர் பங்கேர்க்கும் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு

🗞️ 39 ஆண்டுகளுக்குப் பின் மக்களவை சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம். வாக்கெடுப்பு முடியும் வரை சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லா அமர மாட்டார் எனத் தகவல்

🗞️ தொடர் போராட்டம் நடத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை கொண்டு வர வைத்தோம்- முதல்வர் ஸ்டாலின்

🗞️ கூட்டணிக் கட்சிகளுடன் வரும் 22-ம் தேதி முதல் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

🗞️ அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை-திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி

🗞️ தவெக இறுதி வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுகிறார் விஜய்

🗞️ காங்கிரஸ் குழு அமைத்து 70 நாளாகியும் திமுக பேச்சுவார்த்தையை தொடங்காதது ஏன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆதங்கம்

🗞️ வரும் 15 ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா சேலம் வருவதாக தகவல்

0
0 views