logo

ஜனநாயகன் படம் தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைப்பு

ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படத்தை மறு ஆய்வுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், ’ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா்.
தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி. டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது‌.

0
160 views