logo

தில்லி புறநகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ராமர் பெயர்!

தில்லி புறநகரில் அமைந்துள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஸ்ரீ ராம் மந்திர் மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல மாதங்களாக நீடித்து வந்த உள்ளூர் மக்களின், கோரிக்கையின் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெயர் மாற்றத்திற்குத் தேவையான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான தில்லி மாநில பெயர்கள் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட 29 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழு பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, புறநகரில் அமைந்துள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஸ்ரீ ராம் மந்திர் மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ நிலையம் அருகே ராமர் கோயில் அமைந்துள்ளதால், இப்பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

3
100 views