நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாம்பரத்தில் நடை பயணம்...
05/02/2026 நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை MLA தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு சட்டத்தை சிதைக்கும் நோக்கோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து, சென்னை கிழக்கு தாம்பரத்தில் மாபெரும் நடை பயணம் நடைபெற்றது.
இந்த நடை பயணத்தில் OBC மாநிலத் தலைவர் நவீன்,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் நரேஷ் குமார்,செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செந்தில்குமார்,தாம்பரம் நாராயணன்,பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் திருவெற்றியூர் தொகுதி எர்ணாவூர் வே. கண்ணன்,திருவள்ளூர் மாவட்ட தலைவர் சசிகுமார்,திருவல்லிக்கேணி செல்லப்பா, ரவி ராஜ்,வடசென்னை மாவட்ட மீனவர் அணி செயலாளர் வைத்தியநாதன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக பங்கேற்ற தருணம்.