
சமூக தாகம் இன்றைய செய்திகள் 03/02/2026.
3/2/2026 (தை 20) செவ்வாய்க்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே பாஜகவின் நோக்கம் என-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
🗞️ கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
🗞️ நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விஜய் நடனமாடுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம்
🗞️ நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அறிஞர் அண்ணாவை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு-முதல்வர் மு.க.ஸ்டாலின்
🗞️ ஒன்றிய பட்ஜெட்டில் 8-வது ஊதியக் குழு குறித்து அறிவிக்கவில்லை என ரயில்வே ஊழியர்கள் கண்டனம்
🗞️ இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
🗞️ கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடம் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும்-தெற்கு ரயில்வே
🗞️ நீண்டகால அரசியல் வாழ்க்கையில் இப்படி ஒரு அகங்காரம் கொண்ட தலைமைத்தேர்தல் ஆணையரை பார்த்ததில்லை-மம்தா பானர்ஜி
🗞️ ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்
🗞️ அமெரிக்காவிடம் இருந்து 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்க பிரதமர் மோடி ஒப்புதல்
🗞️ இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து 18%ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
🗞️ மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத்-டெல்லி அணிகள் எலிமினேட்டர் போட்டி