logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 30/01/2026.

30/1/2026 (தை 16) வெள்ளிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ அரசுப்பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது-தமிழக அரசு

🗞️ அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை-எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

🗞️ தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் நீடிப்பு

🗞️ சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது-பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

🗞️ தைப்பூச திருவிழாவையொட்டி நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்-தென்னக ரயில்வே அறிவிப்பு

🗞️ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேபிஸ் தொற்றால் விவசாயி உயிரிழப்பு

🗞️ விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்

🗞️ AI துறை நிபுணர்களுடன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

🗞️ உற்பத்திதுறை வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் என ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

🗞️ நடிகர்கள் சூர்யா,விஜய் சேதுபதி,கார்த்திக்,தனுஷ் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

🗞️ மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி

0
0 views