logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

யார் இந்த அமைச்சர் கோவி.செழியன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆனது எப்படி முதலமைச்சரின் மு க. ஸ்டாலின் தம்பியா இவர்



தஞ்சாவூர் மாவட்டம், திருவுடைமருதூர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தொடர் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் கோவி. செழியன். மேலும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திமுக தலைமைக் கழக பேச்சாளராக இருந்து கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் உறுதியுடன் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றவர்.
ராஜாங்கநல்லூரில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கி, இன்று அரசியல் அரங்கில் தனித்த அடையாளத்துடன் உயர்ந்து நிற்பவர் கோவி. செழியன். திமுக ஆட்சி அமைந்த பின்னர், தலைமையின் வழிகாட்டுதலோடு கொறடா பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டார். பல்வேறு கட்சிகள் அவருக்கு அழுத்தம் கொடுத்து பதவி வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தது, ஏளனமாக பேசியபோதும், “நான் பதவிக்காக அரசியலில் இருப்பவன் அல்ல; என்றும் திமுகவின் உண்மையான தொண்டன்” என்பதை உறுதியாக நிரூபித்தார்.
அந்த உழைப்புக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாக, 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், கோவி. செழியன் அவர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற பின்னரும், அவர் மிகுந்த பணிவுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருவது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
பொதுவாக திமுக நிர்வாகிகள் என்றால் தலைக்கணம் கொண்டவர்கள் என்ற தவறான கருத்து நிலவினாலும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராகவும் இருந்து வரும், கோவி. செழியன் அவர்களுக்கு தலைக்கணம் துளியளவும் இல்லை என்பதே அவரது சிறப்பம்சமாகும்.
“பதவி வரும்போது பணிவு வேண்டும், துணிவு வேண்டும்” என்ற திரைப்படப் பாடல் வரிகள் இவரை நினைவுபடுத்துகின்றன.
சட்டம் பயின்றவர், வரலாற்றை ஆழமாக ஆய்வு செய்தவர், இளம் வயதிலிருந்தே ‘முரசொலி’ நாளிதழை வாசித்து வளர்ந்த அரசியல் சிந்தனையாளர் என்பதால், அவர் மீது வைக்கப்பட்ட பல விமர்சனங்களை அறிவாலும் செயலாலும் முறியடித்துள்ளார். குறிப்பாக, அரசியல் வட்டாரங்களில் சிலர் திமுக அரசியல் பட்டியலின சமூகத்துக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும், அதனை தகர்த்து, அந்த இனத்தைச் சேர்ந்த கோவி. செழியன் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி உயர்த்தி வைத்துள்ளார் தமிழக முதலமைச்சர்.
“பலன் எதிர்பார்க்காமல் உழைத்தால், தக்க நேரத்தில் பதவி தானாக வரும்” என்பதற்கு கோவி. செழியன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இனி திமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அதிகாரத்தில் பங்கு இல்லை என்று யாரும் கூற முடியாத நிலையை அவரது அமைச்சர் பதவி உறுதிப்படுத்தியுள்ளது.
.திமுகவில் அந்த பணிவே
அவரின் அடையாளம்.
சட்டம் பயின்றவர்.
வரலாற்றை ஆய்வு செய்தவர்.
இளம் வயதிலிருந்தே
‘முரசொலி’ வாசித்து வளர்ந்த
திராவிட அரசியல் சிந்தனையாளர்.
சமூக நீதி.
சமத்துவம்.
கல்வி வளர்ச்சி.
இந்த மூன்றிலும்
தெளிவான பார்வையுடன்
பணியாற்றி வருகிறார்.
மக்களிடம் அன்பு.
கட்சியில் விசுவாசம்.
ஆட்சியில் பொறுப்புணர்வு.
இந்த மூன்றும் சேர்ந்த
அரசியல் தலைவர்
கோவி. செழியன் அவர்கள் உண்மையாக உழைக்கும் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சராகவும் அவர் மதிக்கப்படுகிறார்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால், கோவி. செழியன் அவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை திருவுடைமருதூர் தொகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

61
4854 views

Comment