logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 29/01/2026.

29/1/2026 (தை 15) வியாழக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ உலமாக்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ நாடு முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

🗞️ தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்

🗞️ மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை-முதல்வர் ஸ்டாலின்

🗞️ தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியீடு

🗞️ டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு

🗞️ வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முடியுமா? தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

🗞️ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து கூட்டத்தில் பங்கேற்க உள்துறை செயலாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு-தேர்தல் ஆணையம்

🗞️ பிப்ரவரி 2ஆம் தேதி தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுவதாக அறிவிப்பு

🗞️ விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதல்வர் அஜித் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு

🗞️ தைப்பூசம்,வார இறுதி நாட்களையொட்டி வரும் 30-ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் தேதி வரை தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

🗞️ அமேசானில் மேலும் 16000 ஊழியர்கள் பணிநீக்கம். AI தொழில்நுட்பத்துறைகளில் அதிக முதலீடு செய்ய திட்டம்

🗞️ ஆசிய கோப்பைக்கான சர்வதேச தடகள சைக்கிளிங் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் சென்னையில் தொடக்கம்

🗞️ இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து ஆறுதல் வெற்றி

1
67 views