logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 28/01/2026

28/1/2026 (தை 14) புதன்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

🗞️ பெண்கள் சுதந்திரமாக, மரியாதையுடன் அச்சமின்றி வாழ்வதற்கு உரிய கட்டமைப்பு. திராவிட மாடல் அரசு உருவாக்கும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

🗞️ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்க முயற்சிக்கிறது பாஜக அரசு-ராகுல் காந்தி

🗞️ கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பொதுவெளியில் விவாதிப்பதை திமுக நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

🗞️ கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவதே பாஜகவின் வாடிக்கை என திருமாவளவன் விமர்சனம்

🗞️ உயர் பொறுப்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வரவேண்டும். சமூகத்தின் முதுகெலும்பாக பெண்கள் இருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

🗞️ தொண்டர்கள் விரும்பும் கட்சியோடு தேமுதிக கூட்டணி அமைக்கும்-பிரேமலதா திட்டவட்டம்

🗞️ அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் இறக்க நேரிட்டால் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்- எடப்பாடி பழனிச்சாமி

🗞️ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு நிறைவு

🗞️ தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு வருகை


🗞️ இந்தியா-ஐரோப்பியா வர்த்தக ஒப்பந்தத்தால் வேளாண் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்ப்பு

🗞️ இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

6
234 views