logo

தென்காசி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எம் அருணாசலம் நினைவு நாளில் நிர்வாகிகள் அஞ்சலி...

இன்றைய தினம் 21 ஜனவரி 2026 முன்னாள் மத்திய அமைச்சரும் கறை படாத கைகளுக்கு சொந்தக்காரருமான எம். அருணாச்சலம் அவர்களின் 22 வது நினைவேந்தலை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம், வெள்ளனக் கோட்டையில், 22 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஏ.கே. பாண்டியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் ஆர். எஸ். கே. துரை அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தென்காசி மாவட்ட பொது செயலாளர், கடையநல்லூர் முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர், திசை மாறாத பறவை, நல்லூர் நாயகன் கே. எஸ்.கணேசன் .
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் மறைந்த எம். அருணாச்சலம் அவர்களின் மகன் மோகன் அருணாச்சலம் மற்றும் தனது தாயாரான திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளையின் தலைவர் அமலா அருணாச்சலம் ஆகியோருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி INTUC மாநிலச் செயலாளர் செங்கை கண்ணன்,முன்னாள் மாவட்ட SC,ST பிரிவு தலைவர் ஆயிரப்பேரி லட்சுமணன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய தருணம்.

9
275 views