logo

தென்காசி மாவட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129 ஆவது பிறந்தநாள் விழா...

தென்காசி மாவட்டத்தில் அகில இந்திய ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஏ.கே. பாண்டியன் அவர்களின் வேண்டுகோளின்படி ,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் டாக்டர் ஆர்.எஸ். கே. துரை அவர்களின் வழிகாட்டுதலின்படி.

முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு ராஜீவ் காந்தி சமூக சேவை அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த தலைவர் நல்லூர் நாயகன் கே. எஸ்.கணேசன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்
வருகின்ற 21 ஜனவரி 2026 ல் முன்னாள் மத்திய அமைச்சரும் கறை படாத கைகளுக்கு சொந்தக்காரருமாகிய மாண்புமிகு ##M.அருணாச்சலம் அவர்களின் 22 ஆவது நினைவேந்தல் மற்றும் 23 ஜனவரி 2026 அன்றைய தினம் ##நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 129 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.மணி படையாட்சி,வடக்கு மாவட்ட தலைவர் M.காசி பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார் .

மேலும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். ##இந்திய தேசிய காங்கிரஸில் 1938 ஆம் வருடம் காங்கிரஸின் தலைவர் ஆனார் .இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ஜெர்மன் நண்பர்கள் மரியாதைக்குரிய தலைவன் என்று பொருள்படும் ##"நேதாஜி" என்ற பட்டத்தை அவருக்கு அறிவித்தார்கள். "ஜெய்ஹிந்த்" ,"டெல்லி புறப்படு",எனக்கு இரத்தம் கொடு உனக்கு சுதந்திரம் தருகிறேன்" ஆகியவை சுதந்திர போராட்டத்திற்கு நேதாஜி அளித்த முழக்கங்களில் முக்கியமானவைகள் ஆகும்.
சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தேசபக்தி, தியாகம், விடுதலைக்கான அணையாத தாகம் ஆகியவற்றை கொண்டிருந்த அவரை நாம் இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

6
1742 views