logo

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு துறை போக்குவரத்து சார்பில் இம்மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் தேசிய சாலைபாதுகாப்பு மாதமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எனவே, இரண்டு சக்கரம்,மூன்று சக்கரம்,நான்குசக்கரம்மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தமிழ்நாடு அரசுபோக்குவரத்து துறை சார்பில் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,திருவள்ளூர் வட்டாரப்போ வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனைச் சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜீவானந்தம் முன்னிலையில் ஊத்துக்கோட்டை சோதனை சாவடி அருகே

விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்பொழுது அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்பொழுது அவர்களுக்குதலை கவசத்தின் அவசியத்தையும், ஓட்டுநர் உரிமம்,வாகன இன்சூரன்ஸ், வாகனங்களை குறிப்பிட்ட வேகத்தில் இயக்குவதால் எரிபொருள் மிச்சம் மிச்சம் ஏற்படுவதையும் வாகனங்களின் ஆயுட்காலம் நீடிக்கும் என்பதையும் விளக்கி கூறினர்.

தலைக்கவசம் உயிர்க்கவசம்! தலைக்கவசம் அணி! உயிர் இழப்பை தவிர்ப்பீர்! உரிமம் வாங்க எட்டு போடு! உயிரைக் காக்க ஹெல்மெட் போடு!

ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு ! இதுவே உனது உயிர் காப்பு!

சாலையில் அலைபேசி! ஆபத்தாகும் நீ யோசி !! சாலையில் பேசாதே கைபேசி ! எமன் வருவன் நீ யோசி!!

என்பது உள்ளிட்டசாலை பாதுகாப்பு வாசகங்கள்

அடங்கிய துண்டு பிரசுரங்களை அவர்களிடம் வழங்கி அதனை வாசிக்ககூறிவிழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும்,ஓட்டுநர் உரிமம்,வாகனத்தின் இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகளின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறினர்.

மேலும்,நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்குசீட் பெல்ட் அவசியம் குறித்து எடுத்துக் கூறினர்.

மேலும், வேகம் விவேகம் அல்ல என்பதை எடுத்துக்கூறினார். குறிப்பிட்ட வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதால் வாகனத்தின் ஆயுள் காலம் நீடிக்கும் என்பதையும், எரிபொருள் அதிக அளவு செலவு ஆகாது என்பதையும் என்பதையும் விளக்கி கூறினர்.

மேலும்,கடந்த 20 நாட்களாக ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனைச் சாவடியில் அதிகபாரம் ஏற்றி வந்த 25 கனரகவாகனங்களின் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து உள்ளதாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் கூறினர்.

9
545 views