சமூக தாகம் இன்றைய செய்திகள் 18/01/2026.
18/1/2026 (தை 4) ஞாயிற்றுக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கரும்பாயூரணி கார்த்திக் முதலிடம்
🗞️சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
🗞️ இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.2 கோடி அபராதம் விதித்து DGCA அதிரடி
🗞️அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் இலவச பேருந்துப் பயணம். பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத் தொகை வழங்கப்படும்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
🗞️‘கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது’ - கட்சியினருக்கு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தல்
🗞️ஓசூர் விமான நிலையத் திட்டத்தை மீண்டும் நிராகரித்த ஒன்றிய அரசு
🗞️ இந்தியா-நியூசிலாந்து இடையே இன்று கடைசி ஒரு நாள் போட்டி