logo

ஈகுவார்பாளையத்தில் அதிமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

கும்மிடிப்பூண்டி,ஜன.16: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் பொங்கல் திருவிழாவை ஒட்டி அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், என்.எஸ்.ஆர் உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவருமான என்.ஸ்ரீதர் ராஜூ ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் 500அதிமுகவினருக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என்.ஸ்ரீதர் ராஜூ சார்பில் ஈகுவார்பாளையம் ஊராட்சி சூரப்பூண்டி ஊராட்சி ஆகிய இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அதிமுகவினற்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெ.ரமேஷ் குமார், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.எம்.ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், மாவட்ட மாணவர் அணி நிர்வாகி டேவிட் சுதாகர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மகேஷ், பாலசுப்ரமணியன், முருகன், கோவிந்தம்மாள் சீனன் முன்னிலை வகித்தனர் .

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட அதிமுகவினருக்கு முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலர் என்.ஸ்ரீதர் ராஜூ சார்பில் பொங்கல் பரிசு வழங்கினார். அவ்வாறே அவரது சார்பிலும் ஒன்றிய செயலாளர் ஜெ.ரமேஷ் குமார் சார்பிலும் அதிமுகவினருக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசும் போது கும்மிடிப்பூண்டியில் அதிமுவில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் அதிமுகவிற்கு திரும்பி உள்ள நிலையில், அதிமுக கும்மிடிப்பூண்டியில் பலம் பொருந்திய கட்சியாக இருந்தாலும், அதிமுகவினர் தங்களது முழு உழைப்பை தேர்தல் பணியில் செலுத்தி, அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாற்று காட்சியினர், அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் முன்னிலையில் இணைந்தனர்.

இந்த விழாவில் ஈகுவார்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் உஷா ஸ்ரீதர், அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் பி.என்.ஆர்.நாகராஜன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக அவை தலைவர் ஏழுமலை, மேற்கு ஒன்றிய நிர்வாகி டேவிட் குமார், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நிர்மல்குமார், என்.சிவா மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

2
758 views