கடலூர் பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கத்தில் சாக்கடை அடைப்பு – பொதுமக்கள் கடும் அவதி
கடலூர்:
கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் ஊராட்சி, கூத்தப்பாக்கம் பகுதியில் உள்ள யூ கோ வங்கி எதிரே சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சாக்கடை நீர் சாலையில் தேங்கி ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, சாக்கடை அடைப்பை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.