CBSE பாடத்திட்டம் குறித்த சர்ச்சை: திருக்குறள், சிலப்பதிகாரம் நீக்கம் என குற்றச்சாட்டு
சென்னை:
CBSE (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட முக்கிய தமிழ் இலக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மேலும் “இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்கு போதிய அளவில் இடம் பெறவில்லை” என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.