logo

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய திமுக பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலவை, ஆலப்பாக்கம், மெய்யூர், வேம்பேடு கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்படி கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டிஜெ.கோவிந்தராஜன் ஆலோசனைப்படி பொங்கல் பரிசு தொகுப்பான அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி - சேலை, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர் துவக்கி வைத்து தமிழக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்கள் மற்றும் திமுக ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

4
281 views