logo

பூண்டி கிழக்கு ஒன்றிய திமுகவினர் மெய்யூர் ஊராட்சியில் பாக பரப்புரை கூட்டம்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மெய்யூர் ஊராட்சி பாகம் எண் 328,329,330 பகுதியில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பாக பரப்புரை கூட்டம் மாவட்ட கழகப் பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்படி கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜன் ஆலோசனைப்படி பூண்டி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் கழக மூத்த முன்னோடி கஜபதி, மெய்யூர் மு.ஊ. ம.தலைவர், மாவட்ட பிரதிநிதி குப்பன்,மெய்யூர் மு.ஊ. ம.து.தலைவர் பொருளாளர் சுரேஷ், பூண்டி கிழக்கு ஒன்றிய கழக துணை செயலாளர் சித்ரா பாபு முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர் திமுக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து பேசினார் பின்னர் அரசின் சாதனை பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரங்கங்களை வழங்கினார்.

இதில் மாவட்ட, ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் ரீட்டா மணி, கார்மேகம், கிளை கழக செயலாளர்கள், (BLA-2), BDA,மற்றும் கழக முன்னோடிகள் ,நடராஜன், பெருமாள், ரவி, ரகுபதி, கோவிந்தராஜன், விஜி, லோகேஷ், தட்சிணாமூர்த்தி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

5
47 views