logo

“வரலாற்றை மரியாதை செய்யும் தருணம்: குரோம்பேட்டை சுரங்கப்பாதைக்கு காயிதே மில்லத் பெயர் வேண்டும்”

குரோம்பேட்டை சுரங்கப்பாதைக்கு ஜனாப் காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும்
மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
செங்கல்பட்டு:
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை பகுதியில், ராதாநகரிலிருந்து ஜி.எஸ்.டி. சாலையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ள சுரங்கப்பாதைக்கு, அந்தப் பகுதியில் வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்மீது ஆழ்ந்த பற்று கொண்டவருமான ஜனாப் காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு. எம். தமிமுன் அன்சாரி, எம்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. எம். ஜாகிர் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் இந்த சுரங்கப்பாதைக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக, மாநகராட்சி தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், இவ்விவகாரம் மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களை உதட்டால் அல்ல, உள்ளத்தால் நேசிக்கும் முஸ்லிம்களின் பாதுகாவலராக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களும்,
துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்,
இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, குரோம்பேட்டை சுரங்கப்பாதைக்கு ஜனாப் காயிதே மில்லத் அவர்களின் பெயரை சூட்ட உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் மனிதநேய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

13
1845 views