
சமூக தாகம் இன்றைய செய்திகள் 09/01/2026.
9/1/2026 (மார்கழி 25) வெள்ளிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ `உங்க கனவ சொல்லுங்க' என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ பாமகவை உரிமை கொண்டாட யாருக்கும் தகுதி இல்லை-ராமதாஸ் பரபரப்பு பேட்டி
🗞️ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
🗞️ வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
🗞️ போரூர் - வடபழனி இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
🗞️ ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
🗞️ அதிமுகவிடம் 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவிகளை அமித் ஷா கேட்பதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
🗞️ உறுதி அளிக்கப்பட்ட ஒய்வூதியம் 2 வாரத்தில் அரசாணை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
🗞️ IPAC அலுவலகத்தில் சோதனையை தடுத்ததாக மம்தா பானர்ஜி மீது அமலாக்கத்துறை வழக்கு தாக்கல்
🗞️ ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா: அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்