
சமூக தாகம் இன்றைய செய்திகள் 07/01/2026..
7/1/2026 (மார்கழி 23) புதன்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 34.087 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-அமைச்சர் சிவசங்கர்
🗞️ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
🗞️ கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லியில் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
🗞️ அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என கட்டுப்பாடுகள் விதித்து அரசாணை
🗞️ காற்று மாசு விவகாரம்: ஒன்றிய,டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
🗞️ அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் வரும் 9-ம் தேதி நேர்காணல்-எடப்பாடி பழனிசாமி
🗞️ எடப்பாடி பழனிச்சாமி மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா?-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்
🗞️ கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு. வழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்புகளை தொடர்ந்து அறிவிப்பு
🗞️ அறந்தாங்கி பகுதியில் பொங்கல் மண்பாண்டங்கள் தயாரிப்பு மும்முரம்
🗞️ திருச்செந்தூர் அருகே கடற்கரையில் கடல் அரிப்பால் மீனவர்கள் பாதிப்பு