
சமூக தாகம் இன்றைய செய்திகள் 05/01/2026.
5/1/2026 (மார்கழி 21)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
🗞️ தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்-அமித் ஷா மீண்டும் திட்டவட்டம்
🗞️ தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
🗞️ பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கும் அரசு ஊழியர்கள்
🗞️ பள்ளிகள் திறந்தாலும் போராட்டங்கள் தொடரும்-இடைநிலை ஆசிரியர்கள்
🗞️ திருச்சூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து இன்ஜின் உள்பட 500 பைக்குகள் தீயில் கருகின
🗞️ புதுச்சேரியில் தவெக கூட்டத்திற்கு விதியை மீறி ஆட்கள் சேர்த்த புஸ்ஸி ஆனந்தை விளாசிய பெண் எஸ்பி அதிரடி மாற்றம்-உள்துறை அமைச்சகம் உத்தரவு
🗞️ வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்-எடப்பாடி பழனிச்சாமி
🗞️ பெரியாரை வீழ்த்த நினைப்பவர்களுக்கு சீமான் அரசியல் எதுவாக அமையக்கூடாது-தொல்.திருமாவளவன்
🗞️ அமெரிக்கா-வெனிசுலா மோதல் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்