logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 03/01/2026..

3/1/2026 (மார்கழி19)
சனிக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🗞️ காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை வருகை. சீட் விவகாரம் உட்கட்சி பூசல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை

🗞️ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்

🗞️ சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள்,ஊழியர்கள் கடும் அச்சம்

🗞️ பொங்கல் பண்டிகைக்கு சென்னை,கோவை,ராமேஸ்வரம்,நெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 10 சிறப்புகள் இயக்க தென்னக ரயில்வே முடிவு

🗞️ உலகின் 2வது நீளமான அழகான மெரினா கடற்கரையில் பொம்மை,உணவு,பேன்சி பொருட்கள் தவிர மற்ற கடைகளை அனுமதிக்க கூடாது.சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரைக் கிளை

🗞️ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் களைகட்டிய மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம்

🗞️ தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில் இருந்து எம்ஜிஆர் பெயர், புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

🗞️ AI மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரி்ப்பதாகப் புகார். பதிவுகளை உடனடியாக அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு கெடு

🗞️ ஆஸ்திரேலியாவில் நடைபெறும் யூனிடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கிரீஸ் வெற்றி

10
627 views