logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 01/01/2026.

1/1/2026(மார்கழி 17)
வியாழக்கிழமை
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜனவரி 6-ம் தேதி அமைச்சரவை கூட்டம்-முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗞️ விடை பெற்றது 2025. பிறந்தது புத்தாண்டு. இரவை பகலாக்கிய வாண வேடிக்கைகளுடன் மலர்ந்தது புதிய ஆண்டு

🗞️ தமிழகம் முழுவதும் கறிக்கோழி உற்பத்தி இன்று முதல் நிறுத்தம்

🗞️ பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

🗞️ அன்புமணி ஆதரவு எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்த ராமதாஸ் பேரன் மீது போலீசில் புகார்

🗞️ சென்னையில் அடாது மழை பெய்தாலும் விடாது பணி செய்த தூய்மைப் பணியாளர்கள்

🗞️ பொங்கல் திருநாளின் போது பொதுமக்கள் சிரமின்றி பயணிக்க தனியார் பேருந்துகளையும் ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை- அமைச்சர் சா.சி.சிவசங்கர்

🗞️ பட்டுக்கோட்டையில் 50 ஆண்டு பழமையான மரத்திற்கு புத்துயிர் கொடுத்த இளைஞர்கள். மரத்தை வேரோடு பிடிங்கி மாற்று இடத்தில் நடவு செய்து அசத்தல்

🗞️ வலி நிவாரணியான நிம்சுலைடினை 100 மில்லி கிராம் மாத்திரைகளாக உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடைவிதித்து மத்திய அரசு உத்தரவு

🗞️ கரூர் உயிரிழப்புகள் குறித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாரிடம் டெல்லி சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

🗞️ இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் : ட்ரம்ப்பை தொடர்ந்து சீனா அதிபர் அறிவிப்பு-இந்தியா திட்டவட்ட மறுப்பு

0
12 views