அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் வருகையை ஒட்டி 100 அடி உயரத்தில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்
கும்மிடிப்பூண்டி,டிச.28: வருகின்ற செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி சுற்றுப்பயண பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் 100 அடி உயரத்தில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் வருகின்ற செவ்வாய்க்கிழமை தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி தனது 180 ஆவது சுற்றுப்பயன பிரச்சாரத்தை நடதளார் .இதனை ஒட்டி அதிமுகவினர் கடந்த சில நாட்களாக தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்களை கூட்டத்திற்கு அழைக்கும் வகையில் பொதுமக்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி பிரச்சாரம் நடத்த உள்ள திடலில் அவரது வருகை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 100 அடி உயரத்தில் ராட்சத பலூனை கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ மற்றும் அதிமுக மாவட்ட பேரவை செயலாளர் கே.எஸ்.விஜயகுமார் பறக்கவிட்டார்.இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.எம்.ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெ. ரமேஷ் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ், கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக பாசறை செயலாளர் ஆர்.சேதுபதி மற்றும் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.