என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி, தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம்
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் மேற்கு ஒன்றியம், கிருஷ்ணாபுரம், சிறுவாக்கம் ஊராட்சியில் திமுக ஆட்சியின் சாதனைகள் விளக்கப் பரப்புரை கூட்டம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்- வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழகப் பேச்சாளர் கரூர் முரளி அவர்கள் பாகவாரியாக நடந்த தெருமுனை கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி உரையாற்றினார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆ. ராஜா , மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.முரளிதரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.