logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 27/12/2025.

27/12/2025 சனிக்கிழமை (மார்கழி 12)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2 லட்சத்து 66 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

🗞️ அடுத்த 5 ஆண்டுக்குள் 48 முக்கிய நகரங்களில் ரயில் சேவை இரட்டிப்பாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது

🗞️ வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும் நாளையும் நடைபெறுகிறது

🗞️ 14 வயதில் கிரிக்கெட்டில் சாதனைகள் குவித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி,குடியரசு தலைவரிடம் பிரதமரின் தேசிய சிறார் விருதை பெற்றுக் கொண்டார்

🗞️ கரூரில் பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரம். டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன்

🗞️ 2026 ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை ஜன.20 ல் கூடுகிறது- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

🗞️ மக்களையே சந்திக்காத நடிகர்கள் தெருவுக்கு வரும்போது கூட்டம் கூடத்தான் செய்யும்-சரத்குமார் விமர்சனம்

🗞️ கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணி அதிரடி நீக்கம்- அன்புமணி அறிவிப்பு

🗞️ சென்னையில் 153 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: டென்டருக்கு தடை விதிக்க ஹைகோர்ட் கிளை மறுப்பு

🗞️ மேலும் ஒரு இந்து தொழிலாளி அடித்துக் கொலை வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு

8
1175 views