logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 25/12/2025.

25/12/2025 வியாழக்கிழமை (மார்கழி 10 )
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ கடலூர் மாவட்டம் எழுந்தூரில் டயர் வெடித்து அரசு பேருந்து,இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழப்பு

🗞️ எஸ்.ஐ.ஆர். படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்-தேர்தல் ஆணையம்

🗞️ இயேசு காட்டிய பாதையில் கருணை,நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தை உருவாக்க உறுதியளிப்போம்-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

🗞️ தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

🗞️ பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம். 289 கோடி ரூபாய் ஒதுக்கியது தமிழ்நாடு அரசு

🗞️ ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ். முதற்கட்டமாக ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்-மா.சுப்பிரமணியன்

🗞️ அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 34.30 கோடியில் 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

🗞️ 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி

🗞️ புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து மோசடி வழக்கு: ரூ 12 கோடி லஞ்சம் வாங்கிய மாஜி ஐ.எப்.எஸ் அதிகாரி கைது

🗞️ அமெரிக்காவின் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உக்ரைன் சம்மதம்

7
605 views