logo

ஆலங்குளம் தொகுதி சோலை சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம்,ஆலங்குளம் தொகுதி, சோலைசேரி கிராமத்தில், ஏழை எளிய கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு சட்டத்தை வித்சித்பாரத் கேரண்டி ரோஷ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) - 2025 என பெயர் மாற்றி , மாநில அரசுகளை 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என நிர்பந்தித்து ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மோடி அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆலங்குளம் தொகுதி சோலைசேரியில் ,கருவந்தா ஊராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க ஒன்றிய செயலாளர் சேக்முகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பாலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழ உறுப்பினர் ஐய்யப்பன், ம.தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் மருதசாமி பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகி கணேசன், காங்கிரஸ் கட்சி தொண்டரணி குத்தாலிங்கம், விசிக .மண்டலச் செயலாளர் எட்டப்பன், மனித நேய மக்கள் கட்சி தொண்டர் அணிச் செயலாளர் முத்தலிபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ் ம. திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி விசிக் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் விவசாயத் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர் மாரியப்பன், வீ.கே.புதூர் செயலாளர் மாரியப்பன், மூத்த உறுப்பினர் சங்கரன், குருசாமி, சொர்ணம், பேச்சியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.என்றும் மக்கள் நலப் பணியில் தென்காசி மாவட்ட தோழர் தாமோதரன்.

34
1108 views