logo

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அதிமுக சார்பில் கன்னிகைபேர் பஜார், பெரியபாளையம் பேருந்து நிறுத்தம், வடமதுரை பேருந்து நிறுத்தத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுக நிறுவனர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம் எல் ஏ திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.எஸ்.விஜயகுமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இ.கே.கே.கோதண்டன், எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.பி.வேதகிரி மற்றும் கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2
67 views