logo

மக்கள் உரிமைகள் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் உலக மனித உரிமை தின விழா – திருவள்ளூரில் சிறப்பாக நடைபெற்றது

மக்கள் உரிமைகள் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் உலக மனித உரிமை தின விழா – திருவள்ளூரில் சிறப்பாக நடைபெற்றது
மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் ஐந்தாம் ஆண்டு விழாவும், உலக மனித உரிமை தின விழாவும் 2025 டிசம்பர் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் உள்ள ஸ்ரீ உமா சங்கர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
“மனிதம் காப்போம்! உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் மனித உரிமை ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூகப் பெரியவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த விழாவிற்கு மக்கள் உரிமைகள் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சே.பா. சபரி ராஜ், M.A., M.Phil., DITM., D.Litt., அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னிலையாக மாநில பொதுச் செயலாளர் திரு. M.P. மூங்கில் செல்வம், மாநில பொருளாளர் திரு. D. நாரயணமூர்த்தி, B.E., மற்றும் மாநில முதன்மை செயலாளர் டாக்டர் R. கந்தன், MCH., ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக
புலவர் க. ஞானதேசிகன், புலவர் வேதா. தனபால், திருமதி ஷகிலா ஹீசைன், திரு J.X. ஜுலியஸ் சீசர், வழக்கறிஞர் P. தாமஸ் பர்னாபஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மனித உரிமைகளின் முக்கியத்துவம் குறித்தும், சமத்துவ சமூகத்தின் தேவையையும் எடுத்துரைத்தனர்.
சிறப்புரையாற்றிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் M. மணிகோபி, B.E., LL.B., மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. R. கார்த்திக் சேவுகப்பெருமாள், M.B.A., ML., ஆகியோர் மனித உரிமை சட்டங்கள் குறித்தும், பொதுமக்களின் உரிமை பாதுகாப்பின் அவசியத்தையும் விளக்கினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை மாநில துணைச் செயலாளர் திரு. அந்தோணி ஜேம்ஸ், மாநில அமைப்புச் செயலாளர் திரு. M. சுரேஷ், மாநில மகளிரணித் தலைவி திருமதி நாகவேணி பாலமுருகன், மாநில துணைச் செயலாளர் திருமதி S. பரிதா ஷேக்முகமது ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.
முழுநாள் நடைபெற்ற இவ்விழா அமைதியான முறையிலும், உற்சாகமான சூழலிலும் நடைபெற்று, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தியதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

0
0 views