logo

“திமுக ஆட்சியிலும் மாட்டுக்கறி விற்பனைக்கு தடையா? தாம்பரம் மாநகராட்சி மீது கேள்வி”

மேற்கு தாம்பரத்தில் மாட்டுக்கறி கடைக்கு தடை விதித்த மாநகராட்சி – பொதுமக்கள் கேள்வி

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வ உ சி தெரு, கஸ்தூரி பாய் நகர், மேற்கு தாம்பரம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வரும் மாட்டுக்கறி கடையை மூட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களால் விரும்பி வாங்கி உணவாக பயன்படுத்தப்படும் மாட்டுக்கறியை அந்த பகுதியில் விற்பனை செய்யக் கூடாது என கூறி, கடையை இழுத்து மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதே தெருவில் ஏற்கனவே ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறி கடைகள் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அவை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாட்டுக்கறி கடைக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மாநகராட்சி அதிகாரிகள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிப்பதாகவும், எதிர்காலத்தில் வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைக்கு தெளிவான காரணங்களை மாநகராட்சி நிர்வாகம் விளக்க வேண்டும் என்றும், உணவு உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

88
2855 views