logo

சமூக தாகம் இன்றைய செய்திகள் 28/12/2025.

18/12/2025 வியாழக்கிழமை (மார்கழி 3)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

🗞️ ஊரக வேலை திட்டத்திற்கு மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன?-முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

🗞️ ஒன்றிய அரசின் விக்சித் பாரத் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

🗞️ அன்புமணி மீதான ஊழல் வழக்கில் சிபிஐ விரைந்து நடவடிக்கை வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ்

🗞️ 100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய அளவில் நாளை போராட்டம்-அகில இந்திய கிராமப்புற வேலைத் திட்ட தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு

🗞️ தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

🗞️ ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட பெயரை மாற்ற வேண்டாம்-பழனிசாமி வலியுறுத்தல்

🗞️ பிஎஸ் 3 அல்லது அதற்கு முந்தைய வாகனங்கள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

🗞️ ஈரோட்டில் இன்று விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம்

🗞️ டெல்லியில் தனியார்,அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு

🗞️ பொது சிவில் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் உத்தரகாண்ட் ஆளுநர்

🗞️ அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

🗞️ இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடும் பனிமூட்டத்தால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து

7
859 views