logo

கம்பத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி 500 இளைஞர்கள் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பி .எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி இணையும் விழா அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு, கம்பம் நகர செயலாளர்கள் அய்யர், சுப்பிரமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கம்பம் தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சையது அபுதாஹிர், கம்பம் நகர இளைஞரணி செயலாளர் அப்ரிடி அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய இளைஞர்கள் 500 பேர் நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். புதிய நிர்வாகிகளை வரவேற்று ஜெகநாத் மிஸ்ரா பேசுகையில்,
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்.தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் வலுவான கட்டமைப்பை அமைத்துள்ளோம்.

குறிப்பாக தென் மாவட்டங்களில் 25 தொகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
இந்த மண்ணையும் மக்களையும் காக்க
நமது மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும். இது மக்களுக்கான கட்சி அதுதான் நமது மக்கள் முன்னேற்ற கழகம். நாங்கள் இடம்பெறுகின்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் அதற்கான பணிகளை தொடங்கி விட்டோம் என்று பேசினார்.
கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு துணைப் பொதுச் செயலாளர் செல்வேந்திரன் சால்வை.
அணிவித்து வரவேற்றார்.

மாநில வியாபாரிகள் அணிச் செயலாளர் பன்னீர்செல்வம்,
மாநில போக்குவரத்து பிரிவு அமைப்பாளர் நந்தகுமார், கம்பம் தொகுதி செயலாளர் அபுதாகிர், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்குமார்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கப்பாண்டி,
மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா அறிவழகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, மற்று நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0
368 views