
கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம் வி சேகர் செய்தியாளர்கள் சந்திப்பு தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டாம் என எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 14/12/2025 அன்று கோகுல மக்கள் கட்சி சார்பில் இலவச கல்யாண மாலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து வரன் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை எம்.வி சேகர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் பல ஆண்டுகளாக சுதந்திரம் கிடைத்தோம் பிற்படுத்தப்பட்ட யாதவ சமுதாயத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இட ஒதுக்கீடு வழங்க அரசு மறுக்கிறது இச்சூழலில் யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளும் மிகவும் வருந்தப்படுகின்றனர் அது மட்டும் இன்றி தமிழக முழுவதிலும் 234 தொகுதிகளிலும் பரவலாக இருக்கும் இந்த யாதவ சமுதாயத்தின் வாக்கை மட்டும் பெற்றுக் கொண்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சமுதாயத்திற்கு எந்த ஒரு முன்னுரிமையும் கொடுப்பதில்லை செல்வாக்கு மிக்க பதவிகளையும் அளிப்பதில்லை யாதவர்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வருகின்றனர் இவர்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக கோகுல மக்கள் கட்சி குரல் கொடுத்து வருகிறது அமைதியான முறையில் நாங்கள் யாதவ சமுதாயத்திற்கு தனி உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எங்களுக்கு உரிய இட ஒதுக்கடை கொடுங்கள் மற்ற சமுதாயத்திற்கும் கொடுங்கள் அதனால் அனைத்து சமுதாயமும் வளர்ச்சி அடையும் என்கின்றார் அது மட்டும் இன்றி வரும் தேர்தலில் யாதவர்களை யார் புறக்கணித்தாலும் அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் மூலமாக பதிலளிக்கப் போவதாகவும் அவர் கூறினார் சுமார் 100 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களம் இறக்கி யாதவர்களின் வாக்கை யாதவர்களுக்கே என்று எங்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகளை அரசியல் வரலாறு இல்லாமல் எங்களால் செய்ய முடியும் எங்களுக்கு சரியான மரியாதை யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கே இந்த முறை தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் வாக்கு செல்லும் அதில் ஒரு சில நான் தலைவர் நான் சொன்னால் என் மக்கள் வாக்களிப்பார்கள் என்று ஏமாற்றினால் அந்த சித்து விளையாட்டுகள் இனிமேல் நடக்காது கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக போன்ற காட்சிகளுடன் கூட்டணிகள் இணைந்து அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவை ஓட்டத்தை அடைக்கினோம் பல மாவட்டங்களில் வாக்கு வங்கியை பிரித்து படும் தோல்வி அடைய செய்வதற்கு வழி வகுத்தோம் இம்முறையும் சில அரசியல் கட்சிகளை எங்களால் படுதோல்வி அடைய செய்வோம் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்காவிட்டால் நாங்கள் வெற்றி பெறுவது எங்கள் நோக்கம் அல்ல எதிரியை வீழச்செல்வதே எங்கள் பெரும் நோக்கம் மேலும் கால்நடை வாரியம் அமைக்க வேண்டும் செஞ்சிக்கோட்டையை ஆனந்தக்கோன் கோட்டை என அறிவிக்க வேண்டும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அழகு முத்து கோன் பெயரை சூட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் வரும் 22 12 2025 ஆம் தேதி திருவாள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடக்கவிருக்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திரளான யாதவர் சமுதாய மக்கள் பங்கேற்க வேண்டும் நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் அமைதியான முறையில் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அறவழியில் ஆனால் தமிழக அரசு எங்களை கலவரத்திற்கு வழிவகைக்கிறது எங்கள் இளைஞர்கள் சமுதாயம் கொந்தளித்திருக்கின்றனர் கண் அசைத்தால் போதும் ஜார்ஜ் கோட்டையாக இருந்தாலும் கலவரம் செய்ய அடங்க மாட்டோம் ஆனால் யாதவ சமுதாய இளைஞர்களை சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன் தமிழக அரசே இனியாவது கால தாமதம் செய்யாமல் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை எங்கள் உரிமையை எங்களுக்கு வழங்கி விடுங்கள் என்று எச்சரித்தார் இவ்வாறு அவர் கூறினார்