logo

தென்காசி மாவட்டம்,பாமக வின், சமூக நீதிப் பேரவை தலைவர், அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அறிக்கை...

டிசம்பர் 06. இன்றைய தினத்தில் பாரத ரத்னா , #டாக்டர் அம்பேத்கர்# அவர்களின் நினைவு நாளில் தென்காசி மாவட்ட #பாட்டாளி மக்கள் கட்சியின் , #சமூக நீதிப் பேரவை தலைவர், #வழக்கறிஞர் இலத்தூர். #கோ. கிருஷ்ணன் அவர்கள், இலத்தூர் பேருந்து நிறுத்தத்தின் அருகில், அன்னாரின் திருவுருவ புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்; சட்ட மாமேதை ஏழைகளின் ஒளி விளக்கு,அண்ணல் #அம்பேத்கர் அவர்கள் உலகெங்கிலும் போற்றக்கூடிய பெரும் மதிப்பிற்குரிய ஒரு உன்னத தலைவர் ஆவார். அவர் கூறிய ஒரு சில பொன்மொழிகள் சில .
"நாம் முதலில் இந்தியர்கள்", "கடைசியாகவும் இந்தியர்கள்".
கற்பி!, ஒன்று சேர்!, புரட்சி செய்!, .
"சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்".
"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறி விடுவது என் கடமை".
மக்களின் அறியாமையை உடைத்தெறிந்த ஒளிக்கதிர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் புகழ் திக்கெட்டும் பரவட்டும் அவர் வகுத்த #சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம்.இந்நாளில் புரட்சியாளரின் நினைவு நாளை போற்றி வணங்குவோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2
58 views