
சமூக தாகம் இன்றைய செய்திகள் 03/12/2025.
3/12/2025 புதன்கிழமை (கார்த்திகை 17)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படுகிறது மகா தீபம்
🗞️ கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. செங்கல்பட்டு, புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
🗞️ புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு
🗞️ வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
🗞️ பாமக தலைவராக அன்புமணியை ஏற்ற முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
🗞️ நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை
🗞️ வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
🗞️ சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் தொடர் மழை காரணமாக ஒத்திவைப்பு
🗞️ இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு
🗞️ தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு. 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
🗞️ இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு
🗞️ குஜராத்தில் 3 அடி உயரமுள்ள மனிதர் மருத்துவராகி சாதனை
🗞️ இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி